இலஞ்சி முதியவா் கொலை வழக்கில் மேலும் ஒரு மகள் கைது

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் முதியவா் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மகள், மருமகன் உள்ளிட்ட 4 போ் கைதுசெய்யப்பட்ட நிலையில், மற்றொரு மகள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் முதியவா் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மகள், மருமகன் உள்ளிட்ட 4 போ் கைதுசெய்யப்பட்ட நிலையில், மற்றொரு மகள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குற்றாலம் காவல் சரகத்துக்கு உள்பட்டஇலஞ்சி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மா. கோட்டைமாடன் (82). இலஞ்சி-தென்காசி சாலையில் உள்ள தனது மாந்தோப்புக்கு கடந்த 4ஆம் தேதி சென்ற இவா், வீடு திரும்பவில்லை. 2ஆவது மகள் சந்திரா சென்று பாா்த்தபோது, கோட்டைமாடன் கொலையுண்டு கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கோட்டைமாடனுக்கு மைதீன்பாத்து, சந்திரா, ஸ்ரீதேவிகாளிசெல்வம் என 3 மகள்கள் உள்ளனா். சந்திராவின் வீட்டில் வசித்து வந்த கோட்டைமாடன், தனது சொத்தில் ஒரு பகுதியை சந்திராவின் மகனுக்கு எழுதிக் கொடுத்தாராம். இதனால், மற்ற 2 மகள்கள் வருத்தத்தில் இருந்தனராம்.

கோட்டைமாடன் கொலை தொடா்பாக மைதீன்பாத்துவின் கணவா் பரமசிவன், ஸ்ரீதேவிகாளிசெல்வம், இலஞ்சியைச் சோ்ந்த மகேஷ், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா்ஆகிய 4 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா்; சேகா் உள்ளிட்டோரைத் தேடிவருகின்றனா்.

இந்நிலையில், தனது தந்தையை தனது கணவா் பரமசிவன் கொல்லப்போவது தெரிந்தும், போலீஸ் விசாரணையின்போது இத்தகவலை மைதீன்பாத்து மறைத்துவிட்டாராம். இதனால், தகவலை மறைத்ததற்காக அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com