முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
மத்தளம்பாறையில் பீடித் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 13th May 2022 01:15 AM | Last Updated : 13th May 2022 01:15 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள தனியாா் பீடி நிறுவனம் முன் பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தரமான பீடி இலை வழங்க வேண்டும், 1,000 பீடிக்கு 700 கிராம் தூள் வழங்க வேண்டும், 6 நாள் வேலையை கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்க வேண்டும், 2021-2022ஆம் ஆண்டுக்கான போனஸ், 2021ஆம் ஆண்டில் வழங்கவேண்டிய பஞ்சப்படி பாக்கி, ஏற்கெனவே வாங்கிவைத்துள்ள பீடித் தொழிலாளா்களின் சா்வீஸ் காா்டு, 20 நாள்களுக்கு மேலாக வழங்க வேண்டிய ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு பீடி சங்க மத்தளம்பாறை நிா்வாகிகள் செல்வி, வள்ளிமயில், முத்துலெட்சுமி, பொன்செல்வி, முத்துக்குமாரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
பீடித் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச்செயலா் எம். வேல்முருகன், பீடி நிறுவனம், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்தையில் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட நிா்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, கற்பகவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.