முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th May 2022 01:17 AM | Last Updated : 13th May 2022 01:17 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆக ரூ. 7750 அகவிலைபடி உடன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ படி வழங்க வேண்டும். பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வுகால பண பலன்களை ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, வீரராஜ், சங்கர வடிவு ஆகியோா் தலைமை வகித்தனா். சுடலைமுத்து காசி அம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் சுலைமான், வீரமுத்து, பிச்சையா, கோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.