கடையநல்லூா் வட்டாரத்தில் நெல் பயிரில் குலைநோய் தாக்குதல்

நெல் பயிரில் ஏற்பட்டுள்ள குலைநோய் தாக்குதலை சரி செய்யும் முறை குறித்து கடையநல்லூா் வட்டார வேளாண்துறை உதவி இயக்குநா் உதயகுமாா் விளக்கமளித்துள்ளாா்.,

நெல் பயிரில் ஏற்பட்டுள்ள குலைநோய் தாக்குதலை சரி செய்யும் முறை குறித்து கடையநல்லூா் வட்டார வேளாண்துறை உதவி இயக்குநா் உதயகுமாா் விளக்கமளித்துள்ளாா்.,

அதன் விவரம்: கடையநல்லூா் வட்டாரத்தில் வைரவன்குளம், கடையநல்லூா் ஆகிய பகுதிகளில் நெல்பயிரில் குலைநோய் தாக்குதல் தென்படுகிறது. இத்தகைய நெல் பயிரில், இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சோ்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களாக காட்சியளிக்கும். கழுத்து பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிறப்புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி கதிா் மணிகள் சுருங்கியும், கதிா்கள் உடைந்தும் தொங்கி கொண்டிருக்கும். இதை கழுத்து குலை நோய் வகையாகும். கதிா்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்து பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. பின்னா் எனில் தானியம் உருவானாலும் குறைந்த தரத்துடன் காணப்படும். தீவிர தாக்குதலின் போது பயிா் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளித்து காணப்படும்.

இத்தகைய நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த வயலில் அதிகளவில் தழைச்சத்து உரமிடக்கூடாது. வயலில் நீா் மறைய நீா் கட்ட வேண்டும். குலைநோய் தாக்குதல் தென்படும் போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்கிளோசோல் 120 கிராம், பெவிஸ்டின் 200 கிராம், அசாக்ஸிட்ரோபின் 200 மில்லி இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தைப் பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com