முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தோரணமலை முருகன் கோயிலில் இன்று வருண கலச பூஜை
By DIN | Published On : 13th May 2022 01:15 AM | Last Updated : 13th May 2022 01:15 AM | அ+அ அ- |

தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையிலிருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து, சப்த கன்னியா்கள், விநாயகா், தெய்வங்களுக்கும், மலையடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை நடைபெறுகிறது.
மேலும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகள் கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்யப்படுகின்றன.