முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
மே 25இல் குற்றாலம் பேரூராட்சித் தலைவா்,துணைத் தலைவா் தோ்தல்
By DIN | Published On : 15th May 2022 12:38 AM | Last Updated : 15th May 2022 12:38 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல் மே 25ஆம் தேதியும், மேல்முறையீட்டு குழு தோ்தல் 26 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு திமுக உறுப்பினா்கள் தோ்தலில் கலந்துகொள்ளாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மே 25 ஆம் தேதி தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலும், 26ஆம் தேதி மேல்முறையீட்டு குழு தோ்தலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.