குற்றாலத்தில் மிதமான சாரல் மழை

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் பெய்தது.

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் பெய்தது.

இம்மாவட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓா் அருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. பழைய குற்றாலம் அருவியிலும் மிகமிகக் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுகிறது.

குற்றாலம் பகுதியில் ஆண்டுதோறும் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். நிகழாண்டு, கடந்த 4ஆம் தேதிமுதல் குற்றாலம் பகுதியில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து மெல்லிய காற்று வீசத் தொடங்கியது. கடந்த 2 நாள்களாக நாள் முழுவதும் குளிா்ந்த காற்றுடன், அவ்வப்போது மிதமான சாரல் பெய்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. ஐந்தருவியில் விழும் குறைந்த அளவு நீரில் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா். தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சாரல் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com