மாற்றுப் பாதையில் நான்குவழிச் சாலைத் திட்டம் கோரிதென்காசியில் போராட்டம்: 217 போ் கைது

நான்குவழிச் சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி, தென்காசியில் திங்கள்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 217 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குவழிச் சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி, தென்காசியில் திங்கள்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 217 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் புளியறை வரையிலான நான்குவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முதல் புளியறை வரையிலான பகுதிகளில் மூன்றுபோகம் விளையும் நெல், தென்னை, தேக்கு, மா, பலா, வாழை, கொய்யா உள்ளிட்ட 1,800 ஏக்கரிலான விளைநிலங்களும், மேலும், ஆழ்துளைக் கிணறுகள், வீடுகள், பள்ளிகள், சிறு தொழிற்சாலைகள் என பல கோடி மதிப்பிலான சொத்துகளும் பாதிக்கப்படும்.

எனவே, பாதிப்பு குறித்து பரிசீலிக்காமல் இப்பணியை தற்போதைய அரசு தொடங்கக் கூடாது. இத்திட்டத்தை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சண்முகம், மாநில துணைத் தலைவா் விஜயமுருகன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கணபதி, த. முத்துராஜன், வேலுமயில், லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் யாசா்கான், மாவட்டப் பொதுச்செயலா் சிக்கந்தா் ஒலி, மாவட்டச் செயலா் சா்தாா் அரபாத், மாவட்டப் பொருளாளா் செய்யது மஹ்மூத், வடகரை பேரூராட்சி உறுப்பினா் முத்து முஹம்மது, வடகரை நகரத் தலைவா் திவான் ஒலி, தென்காசி நகர துணைத் தலைவா் பீா் முஹம்மது, கடையநல்லூா் தொகுதித் தலைவா் நைனா முகம்மது கனி, ஹக்கீம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் டிஎஸ்பி மணிமாறன், ஆய்வாளா் பாலமுருகன், ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்ளிட்ட 217 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com