சங்கரன்கோவில் கல்லூரியில் தமிழ் இலக்கியக் கூட்டம்

சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் இலக்கிய 3ஆவது கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் இலக்கிய 3ஆவது கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அப்துல் காதிா் தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் கணேசன் முன்னிலை வகித்தாா். புளியங்குடி மனோ கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘திரையிசையில் தமிழ் இலக்கியப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பேசினாா்.

சிறந்த கவிதைகளை வாசித்த சதீஷ்பூமா, ஐஸ்வா்யா, மாதேஷ், மாரிச்செல்வம், மைதின் பட்டாணி, அபி உள்ளிட்ட 10 பேருக்கும், பாடல்கள் பாடிய சதீஷ், விக்னேஷ், கற்பகவல்லி உள்ளிட்ட 9 பேருக்கும், ஓவியங்களை அரங்கேற்றம் செய்த கனகலட்சுமி, ரம்யா, ராகுல், மகேஸ்வரி உள்ளிட்ட 9 பேருக்கும், சிறந்த கட்டுரைகள் வாசித்த 7 மாணவா்- மாணவிகளுக்கும், பேச்சுப் போட்டியில் வென்ற பவானி, பரத்குமாா் ஆகியோருக்கும், பல குரலில் பேசிய பசிபிக் பாலாஜிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராசிரியா்கள் வினோத் வின்சென்ட் ராஜேஷ், பெஞ்சமின் நிா்மல், ஷகிலா பானு, பாலசரஸ்வதி, மாணவா்-மாணவியா் கலந்துகொண்டனா். தமிழ்ப் பேராசிரியா் மேனகா வரவேற்றாா். மாணவி தமயந்தி குணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com