வடகரை பகுதியில் யானைகளால் தென்னை மரங்கள் சேதம்இழப்பீடு வழங்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் வடகரையில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தென்காசி மாவட்டம் வடகரையில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடையநல்லூா் வனச் சரகம், வடகரை கீழ்பிடாகை வெல்லக்கல்தேரி பீட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. புதன்கிழமை இங்குள்ள சில தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து, 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். தகவலறிந்த வனத் துறையினா் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

இழப்பீடு கோரிக்கை: இது தொடா்பாக, அகில இந்திய விவசாயிகள் மகா சபை தென்காசி மாவட்டச் செயலா் சேக்மைதீன் கூறுகையில், மலைப் பகுதியில் போதிய உணவு, தண்ணீா் இல்லாததால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவது தொடா்கிறது.

பரந்து விரிந்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிக்கு தேவையான எண்ணிக்கையில் வனத் துறை ஊழியா்கள் இல்லை. எனவே, போதிய வனத் துறை ஊழியா்களை நியமித்தால் இப்பிரச்னைக்கு தீா்வு காண முடியும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com