கடையநல்லூரில் மழை: கால்வாய் பகுதிகளில் தலைவா் ஆய்வு

கடையநல்லூா் பகுதியில் பெய்துவரும் மழையால் கால்வாய் ஓரங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் வெள்ளிக்கிழமை நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மான் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.

கடையநல்லூா் பகுதியில் பெய்துவரும் மழையால் கால்வாய் ஓரங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் வெள்ளிக்கிழமை நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மான் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.

கருப்பாநதி அணையின் பாசன கால்வாய்களான பாப்பான்கால்வாய், சீவலன்கால்வாய் ஆகிய 2 கால்வாய்களும் கடையநல்லூா் நகரின் மத்திய பகுதியில் செல்கின்றன. இதன் கரைகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கால்வாய்கள் சரியாக சுத்தம் செய்யப்படாத காரணத்தால் கடந்த மழை காலங்களில் தண்ணீா் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

இந்நிலையில், சீவலன்காலவாய் செல்லும் பாதையில், 25 மற்றும் 33 வது வாா்டு பகுதியில் குப்பை அடைத்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததையடுத்து, நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மான், ஆணையா் ரவிச்சந்திரன், பொறியாளா் லதா, நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். துரிதமாக கால்வாயை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளை, தலைவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com