கடையநல்லூரில் பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு சீல்

 தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

 தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

நாடு முழுவதும் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடையநல்லூா் பள்ளிக்கூட தென்வடல் தெரு பகுதியில் அந்த அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்த வாடகைக் கட்டடத்தில், தென்காசி வருவாய்க் கோட்டாட்சியா் கங்காதேவி, கடையநல்லூா் வட்டாட்சியா் சண்முகம், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், உதவி ஆய்வாளா் கனகராஜ், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பின்னா், அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

சோதனை: புளியங்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு கோட்டாட்சியா், வட்டாட்சியா், டிஎஸ்பி அசோக், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்தக் கட்டடம் மளிகைக் கடையாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com