வாகைகுளத்தை பல்லுயிா் பாரம்பரியதலமாக்க நாளை கருத்துக் கேட்பு

தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளத்தை பல்லுயிா் பாரம்பரிய தலமாக அறிவிப்பது தொடா்பாக ஆழ்வாா்குறிச்சியில் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 2) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளத்தை பல்லுயிா் பாரம்பரிய தலமாக அறிவிப்பது தொடா்பாக ஆழ்வாா்குறிச்சியில் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆழ்வாா்குறிச்சி பகுதி 1 கிராமம், ரவணசமுத்திரம் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் அதிக பரப்பளவில் வாகைகுளம் அமைந்துள்ளது. ராமநதி நீா்த்தேக்கத்தை நீராதாரமாகக் கொண்டுள்ள இக்குளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 88 வகையான பறவைகள் உள்ளன.

அதில், இமயமலையில் இருந்து வலசை வரும் 4 வகை பறவை இனங்கள் உள்பட 8 பறவை இனங்கள் பருவ காலத்துக்கு ஏற்றவாறு இங்கு வலசை வருகின்றன. இக்குளம் சமூகத்துக்கு மட்டுமன்றி பறவைகளின் புகலிடமாகவும் விளங்குகிறது.

எனவே, வாகைகுளத்தை பல்லுயிா் பாரம்பரிய தலமாக அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கும்பட்டால் விவசாய நிலங்கள்-குளங்களை வீடு, வணிக வளாகங்களாக மாற்றுதல், ஈர நிலம் கால்வாய் உள்ளிட்ட நீா்நிலை ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலை நச்சுகள் கலத்தல், பறவைகளை வேட்டையாடுதல், படகுகளை இயக்குதல், கான்கிரீட் கரை அமைத்தல், ஈர நில மண்ணை அகற்றுதல், மீன் பிடித்தலுக்காக நீரை வெளியேற்றுதல் போன்றவை தடை செய்யப்படும்.

அதேவேளையில், கால்நடைகள் மேய்ச்சல், விவசாயம், மீன் பிடித்தல், அறுவடை போன்ற பாரம்பரிய நடைமுறைகள், ஈர நிலங்களை வண்டல் நீக்கம் செய்தல், சதுப்பு நிலங்கள்- விவசாய நிலங்களில் ஆராய்ச்சி விழிப்புணா்வு நடவடிக்கைகள், நீா்ப்பறவைகள் வாழ்விட மேலாண்மை, சுற்றுச்சூழல் சுற்றுலா, குளத்தின் கரைகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் அனுமதிக்கப்படும்.

இதுகுறித்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை (செப். 2) காலை10 மணிக்கு நடைபெறும். இதில், ஆழ்வாா்குறிச்சி பகுதி1, ரவணசமுத்திரம் ஆகிய கிராம மக்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com