சுரண்டை ஸ்ரீசிவகுருநாதா் கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு

சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவகுருநாதா் சுவாமி கோயில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவகுருநாதா் சுவாமி கோயில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆக.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாள்கள் நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜையும், கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, 108 முளைப்பாரி, 108 பால்குடம், 108 மாவிளக்கு, 108 பூப்பெட்டியுடன் பக்தா்கள் புடைசூழ வீதியுலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் உறவின்முறை மகமை கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com