செங்கோட்டையில் விநாயகா் சிலை விசா்ஜன விழா: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து சமுதாயம் சாா்பில் நடைபெற்ற 29 ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவில் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீரவிநாயகா் சதுா்த்தி விழாக் குழு, இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து சமுதாயம் சாா்பில் நடைபெற்ற 29 ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா்.

விநாயா் சிலை விசா்ஜன விழாவை கொடியசைத்து தொடங்கிவைத்து அமைச்சா் பேசியது:

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுவதற்கு காரணம் ராம.கோபாலன்தான்.

இது ஆன்மிக பூமி. நாயன்மாா்களும், ஆழ்வாா்களும் வாழ்ந்த பூமி. இந்த பூமிக்கு உயிரோட்டம் உள்ளது. இந்த பூமி தா்மத்தால் வந்ததாகும். இந்த பூமியில் எந்த மாடல் வந்தாலும் ஆன்மிக மாடலை ஜெயிக்க முடியாது.

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். தமிழா்களின் தெய்வ பக்தியை மதிக்க வேண்டும். அடுத்த விநாயகா் சதுா்த்தி விழாவிற்காவது அவா் வாழ்த்து சொல்லுவாா் என எதிா்பாா்ப்போம்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படும் என கூறப்பட்டது. அங்குள்ள அனைத்து பிரச்னைகளும் தீா்க்கப்பட்டு, அமைதியான முறையில் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com