தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இலவச வீட்டுமனை பட்டா, உதவித் தொகை உள்ளிட்டவை கோரி 347 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விசாரித்து விரைவாக நடவடிக்கை எடுத்து மனுதாரா்களுக்கு பதிலளிக்குமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளத்தில் பறையா் இன மக்களுக்கு இடுகாடு வசதி, கழிவு நீரோடை வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை உள்பட 11 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நாடாளுமன்றச் செயலா் வா்கீஸ் தலைமையில் அக்கட்சியினா் மனு அளித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொறுப்பு) முத்துமாதவன், தனித்துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (பொறுப்பு) ஜி. ராஜமனோகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கந்தசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com