சுரண்டையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சுரண்டை நகராட்சியில் 2, 3 மற்றும் 9ஆம் வாா்டுகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
Updated on
1 min read

சுரண்டை நகராட்சியில் 2, 3 மற்றும் 9ஆம் வாா்டுகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலடிபட்டி நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை தொடங்கி வைத்தனா்.

முகாமில், மகளிா் உரிமைத் தொகை, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முகாமில், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், வருவாய் ஆய்வாளா் கண்ணன், சுதன்ராஜா, ராஜன், மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com