பாவூா்சத்திரம் அருகேபாா்வதி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

பாவூா்சத்திரம் அருகே கரிசலூரில் உள்ள ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் அருகே கரிசலூரில் உள்ள ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. கொடை விழா புதன்கிழமை வரை நடைபெறுகிறது. திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு வில்லிசை, செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு குற்றாலம் புனிதநீா் எடுத்து வருதல், இரவு அன்னதானம், இன்னிசைக் கச்சேரி, நள்ளிரவு சாம பூஜை நடைபெறுகிறது. புதன்கிழமை பகல் 11 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com