பைக்கில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாகா்கோவில் அருகே பைக்கில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவில் அருகே பைக்கில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த பள்ளம் அன்னைநகா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலா் அனில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், தனி வருவாய் ஆய்வாளா் நிவாஸ்கா், ஊழியா்களும் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவா், அதிகாரிகளைப் பாா்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். அந்த பைக்கில் 3 பிளாஸ்டிக் பைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

ரேஷன் அரிசி, பைக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா், ரேஷன் அரிசியை நாகா்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com