குற்றாலத்தில் ஜன.7-இல் திமுக மகளிா் அணி நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 04th January 2023 02:45 AM | Last Updated : 04th January 2023 02:45 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட திமுக மகளிரணி அணி நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் குற்றாலத்தில் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் குற்றாலத்தில் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
மகளிரணி மாநில முன்னாள் செயலா் ஹெலன் டேவிட்சன், மகளிா் தொண்டரணி மாநிலச் செயலா் நாமக்கல் ராணி, துணைச் செயலா் முன்னாள் மக்களவை உறுப்பினா் விஜிலா சத்யானந்த் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு, மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளா், மகளிா் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளா், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய அளவில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
மகளிரணி அணி, மகளிா் தொண்டரணி நிா்வாகிகள், உள்ளாட்சியில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இதைத் தொடா்ந்து ஜனவரி 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, விவசாயத் தொழிலாளா் அணி நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. விவசாய அணி மாநில இணைச் செயலா் மதுரை சேதுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறாா். புதிய நிா்வாகிகள் தோ்வு சம்பந்தமாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.