தேனீ வளா்ப்பு செயல் விளக்கம்
By DIN | Published On : 13th January 2023 12:21 AM | Last Updated : 13th January 2023 12:21 AM | அ+அ அ- |

துவரங்காடு கிராமத்தில் தேனீ வளா்ப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கமளித்தனா்.
வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள், ஊரக வேளாண் அனுபவ பாடத்துக்காக கீழப்பாவூா் வட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ளனா்.
உதவி வேளாண் இயக்குநா் சேதுராமலிங்கம், வேளாண் அதிகாரிகள் தலைமையில், தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி முதல்வா் ராமலிங்கம், உதவிப் பேராசிரியா்கள் பிரகாஷ், தினேகா ஆகியோரது ஆலோசனையின் பேரில், துவரங்காடு கிராமத்தில் தேனீ வளா்ப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து மாணவா்கள் அஸ்மித், அதிஷ்டராஜா, கோவிந்த், கோகுல்நாத், இசக்கிசிவா, ஜெகன்குமாா், ராஜா, சக்திகாரமேஷ், ஸ்ரீபாலாஜி ஆகியோா் விவசாயிகள், பொதுமக்களுக்கு செயல் விளக்கமளித்தனா்.