சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 20th January 2023 12:18 AM | Last Updated : 20th January 2023 12:18 AM | அ+அ அ- |

சாம்பவா் வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தியம்பெருமான் மற்றும் அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவா் உலா நடைபெற்றது. சிவனடியாா்கள் தேவாரம் பாட நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.