புளியங்குடி நகராட்சி அலுவலகம், வணிக வளாகம் கட்ட நிதி அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி அலுவலகக் கட்டடம், வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலரான ஈ. ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி அலுவலகக் கட்டடம், வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலரான ஈ. ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தலைமைச் செயலகத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவை அவா் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு: வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதி புளியங்குடி நகராட்சிக்குச் சொந்தமான காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் 70 ஆண்டுகளுக்கு முன் செங்கல்-சுண்ணாம்பால் கட்டப்பட்டதாகும். இது, நகரின் மையப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சுமாா் 28 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. காந்தி நினைவு அங்காடி தினசரி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, வாழ்வாதாரம் கருதி மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, அந்த இடத்தில் புதிய காந்தி நினைவு அங்காடி வணிக வளாகம் தரைதளம், முதல் தளம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

மேலும், ஆட்சியா் கடிதத்தின்படி, புளியங்குடி நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு வடக்கு ரத வீதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 30 சென்ட் நிலமும், சுகாதார நிலையம் கட்டுவதற்கு 20 சென்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு உத்தேச தொகை ரூ. 10 கோடி ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com