கீழப்பாவூா் கோயிலில் கொடை விழா தொடக்கம்

கீழப்பாவூா் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

கீழப்பாவூா் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை, சனிக்கிழமை (ஜன. 21) புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன.23) மாலை 5 மணிக்கு குடி அழைப்பு, திருவாலீஸ்வரா் கோயிலிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், நள்ளிரவில் மாக்காப்பு பூஜை, செவ்வாய்கிழமை (ஜன. 24) கீழப்பாவூா் சிவன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம், சிறப்பு பூஜை, நள்ளிரவில் முழுக்காப்பு அலங்காரம், பூச்சட்டி எடுத்து வருதல், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

நிறைவு நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, பிற்பகல் 2 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com