கலைத்திறன் போட்டியில் சுரண்டை பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 24th January 2023 01:05 AM | Last Updated : 24th January 2023 01:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியா் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்போட்டிகளில் 74 பள்ளிகள் பங்கேற்றன. இதில், சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள் தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல், கோலம், பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசும், தமிழ் - ஆங்கிலக் கட்டுரைப் போட்டிகள், குழு பாடல் ஆகியவற்றில் 2ஆம் பரிசும் பெற்றனா். மேலும், புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த பள்ளிகளில் 2ஆம் பரிசு வென்றனா்.
அவா்களை பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமையாசிரியா் மாரிக்கனி, ஆசிரியா்கள் பாராட்டினா்.