கோயில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: நடவடிக்கை எடுக்க மாணவா்கள் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தில் கோயில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி மாணவா், மாணவியா் மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தில் கோயில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி மாணவா், மாணவியா் மனு அளித்தனா்.

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கரநாராயணன், உதவி ஆணையா்(கலால்) ஜி.ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் இரா.சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

புளியங்குடியில், ஊருக்கு வெளியே இருக்கக் கூடிய குப்பை கிடங்கில் மின்தகன மேடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி

இந்துமுன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. நகரத் தலைவா் கணேஷ் மாரி தலைமையில் மனு அளித்தனா்.

ஆவுடையானூா் கிராமம் சிவசுப்பிரமணியபுரத்தில் கோயில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த இடத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பள்ளி மாணவா், மாணவிகள் மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தரவேண்டும் என இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் அகரக்கட்டு லூா்து நாடாா் மனு அளித்தாா்.

கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியம் ஆனைகுளம் ஊராட்சிக்குள்பட்ட அருணாசலபுரம் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரியும், திருவேங்கடம் வட்டம் சங்குபட்டி வடக்கு காலனி மக்கள், தங்களது ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரியும் மனுக்கள் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com