தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளன.

முகாம் நடைபெறும் தேதி, இடங்கள்: ஜன. 25-ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 27-கீழப்பாவூா் டிபிஎஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 30-செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 3-கடையம் சத்திரம் மேல்நிலைப் பள்ளி, 6- கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 8- புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 10- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 15- சோ்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளி.

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 5 புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதோா் இம்முகாமில் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com