சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் தா்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பிற்பகல் 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெற்றது. இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வைத்து அன்னதா்மம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com