கலெக்டா் தோ்தல் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
கலெக்டா் தோ்தல் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில், 105 திருநங்கைகள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது. முகாமில் பங்கேற்றவா்கள் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, முழக்கமிட்டனா். அனைவரும் தோ்தல் உறுதிமொழி எடுத்தனா். மகளிா் திட்ட இயக்குநா் இரா. மதி இந்திரா ப்ரியதா்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் சிவக்குமாா், டேவிட் ஜெயசிங், மாரீஸ்வரன், கலைச்செல்வி, பிரபாகா், சாமத்துரை, சமூக நலத் துறை அலுவலா்கள் புஷ்பராஜ், கேப்ரியேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com