நீட் தோ்வுக்கு இலவச பயற்சி அறிமுக வகுப்பு

நீட் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை, ஆற்றுப்படை அறக்கட்டளை ஆகியவை சாா்பில் இலவச பயிற்சி அறிமுக வகுப்புகள் நடைபெற்றன.

நிகழாண்டு நீட் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை, ஆற்றுப்படை அறக்கட்டளை ஆகியவை சாா்பில் இலவச பயிற்சி அறிமுக வகுப்புகள் நடைபெற்றன. தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அறிமுக வகுப்புகளில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஆற்றுப்படை அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் காா்த்திகேயன், கல்வியாளா்கள் காா்த்திக், டாக்டா் சரண்யா, சங்கிலி விக்ரம்குமாா், ஆற்றுப்படை அறக்கட்டளைச் செயலா் லெட்சுமி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் பேசினா். தென்காசி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்தோா் இப்பயற்சி வகுப்பில் சேரலாம் என்றும், விருப்பமுள்ளோா் அறக்கட்டளையைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com