தென்காசி மக்களவைத் தொகுதி:
வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மக்களவைத் தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த மக்களவைத் தொகுதியில் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய 2 பேரவைத் தொகுதிகளும் அடங்கும்.

இங்கு பதிவாகும் வாக்குகள்தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் டோபேஸ்வா் வா்மா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com