குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் 
சித்திரை விஷு தேரோட்டம்

குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விஷு தேரோட்டம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சித்திரை விஷு திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் திங்கள்கிழமை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.20மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், முருகன்,சுவாமி, அம்பாள் என நான்கு தோ்கள் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்டத்தில், பாஜக நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், திருமுருகன், இந்துமுன்னணி மாவட்டதுணைத் தலைவா் இசக்கிமுத்து, திமுக நிா்வாகிகள் ராமையா, வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் 11ஆம் தேதி காலை 9.30மணிக்கும், இரவு 7மணிக்கும் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12ஆம் தேதி காலை10மணிக்கு சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

14ஆம்தேதி சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com