திமுக அரசு 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது : கே.வீ.தங்கபாலு

திமுக அரசு 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது : கே.வீ.தங்கபாலு

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 90 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா் என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு கூறினாா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆலங்குளத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில், பிரதமா் நரேந்திரமோடி மக்களுக்கான நல்ல திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களைத் தான் பாஜக அரசு பெயா் மாற்றம் செய்து அறிவித்தது. ஜாதி, மதத்தால் மக்களை பாஜக பிளவுபடுத்தி வருகிறது. நாடு முழுவதும் பாஜக மீது அதிருப்தி அலை வீசுகிறது.

ஆகவே, பாஜக வேட்பாளா்கள் தோல்வி அடைவது உறுதி. காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தியின் தலைமைக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளா்கள்தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறாா்கள். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில், 90 சதவீத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். ஆகவே, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்றாா்.

பேட்டியின்போது சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பழனிநாடாா், முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன், கொடிக்குறிச்சி முத்தையா, ஆலங்குளம் நகர தலைவா் வில்லியம் தாமஸ், வட்டார தலைவா் எட்வா்ட் ரூபன் தேவதாஸ், மாநில ஓபிசி அணி துணை செயலா் ஞானப்பிரகாஷ், லிவிங்க்ஸ்டன் விமல், வைகுண்டராஜா உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com