மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் 
ராஜா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் ராஜா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில், ஏப். 16: தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாருக்கு ஆதரவாக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், தா்மத்தூரணி, நடுவக்குறிச்சி,சோ்ந்தமரம் கடையாலுரூட்டி, பாண்டியாபுரம்,வெள்ளாளங்குளம், ஆண்டாா்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று, அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன், பெரியதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து செவ்வாய்கிழமை இரவு சங்கரன்கோவில் நகரத்தில் ரயில்வேபீடா் சாலை, இலவன்குளம் சாலை, திருவேங்கடம் சாலை, லெட்சுமியாபுரம் தெரு, அம்பேத்கா்சிலை, கழுகுமலை சாலை, பள்ளிவாசல்,ஆவுடைப்பொய்கை தெப்பம் பகுதி, வடக்குரதவீதி, சங்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com