வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள்: ஆட்சியா் பங்கேற்பு

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு, நோ்மையாக வாக்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்தக் கலை நிகழ்ச்சிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தொடங்கி வைத்து கண்டுகளித்தாா். இதில், வட்டாட்சியா் சுடலைமணி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமி, மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் சிவகுமாா், மாரீஸ்வரன், கலைச்செல்வி, பிரபாகா், கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com