திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: டாக்டா் க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

கடந்த தோ்தல்களில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா் டாக்டா் க. கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். கொள்கை பரப்பு மாநில துணைச் செயலா் அய்யாத்துரைபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அதிமுக வேட்பாளா் க.கிருஷ்ணசாமி பேசியதாவது:

கடந்த மக்களவைத் தோ்தலிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக அளித்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அரசு பதவியேற்றவுடன் நீட் தோ்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து,

மதுகடைகள் மூடப்படும், கல்விக்கடன், வேளாண் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட எந்த தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இத்தொகுதியின் வளா்ச்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் ஒலித்திட எனக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் கே. சண்முகசுந்தரம் வரவேற்றாா். நகரச் செயலா் சுடலை நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com