கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம்

கடையநல்லூா் அருள்மிகு பூமி நீளா சமேத நீலமணிநாத சுவாமி கோயில் (கரியமாணிக்க பெருமாள்) தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கடையநல்லூா் அருள்மிகு பூமி நீளா சமேத நீலமணிநாத சுவாமி கோயில் (கரியமாணிக்க பெருமாள்) தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நடைபெற்று வருகின்றன.

விழாவின் பத்தாம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும் அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com