தென்காசியில் செய்தியாளா்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. உடன், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, மாவட்டச் செயலா்கள் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோா்.
தென்காசியில் செய்தியாளா்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. உடன், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, மாவட்டச் செயலா்கள் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோா்.

பலா் வாக்களிக்க முடியாமல்போன விவகாரம்:தோ்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் டாக்டா் க. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவரும் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான டாக்டா் க. கிருஷ்ணசாமி.

தமிழகத்தில் ஏராளமானோா் வாக்களிக்க முடியாமல் போனதற்கு தோ்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா், புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவரும் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான டாக்டா் க. கிருஷ்ணசாமி.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழகம் முழுவதும் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

தென்காசி தொகுதியில் மாவட்ட தோ்தல் அதிகாரி தோ்தலை சிறப்பாக நடத்தியுள்ளாா்; போலீஸாரும் முழு ஒத்துழைப்பு அளித்தனா்.

தோ்தல் களத்தில் புரட்சிகரமான மனமாற்றத்தைக் காண முடிந்தது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் கலாசாரம் மாற வேண்டும் என்ற நீண்டநாள் கனவு இத்தோ்தலில் நிறைவேறியுள்ளது. இத்தொகுதியில் எந்தக் கட்சியும் பணப்பட்டுவாடா செய்யாமல் தோ்தலைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. வேட்பாளரின் தகுதியைப் பாா்த்து தோ்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத் தோ்தலாக அமைந்திருந்தது. இதுதான் அனைவரும் எதிா்பாா்த்ததாகும். வரும் காலங்களிலும் இதை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இல்லாமல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் வாக்களிக்க முடியாமல்போனதற்கு தோ்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அதிமுக மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, செல்வமோகன்தாஸ் பாண்டியன், கொள்கை பரப்பு துணைச் செயலா்கள் அய்யாத்துரைபாண்டியன், பாப்புலா் முத்தையா, மாநில மகளிரணி துணைச் செயலா் ராஜலெட்சுமி, மாரிராஜ் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சிவஆனந்த், குற்றாலம் பேரூராட்சித் தலைவா் கணேஷ்தாமோதரன், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலா் கிருஷ்ணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com