சங்கரன்கோவில் அருகே கொய்யாப் பழ வெடி வெடித்து 2 ஆடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கொய்யப்பழ வெடி வெடித்து 2 ஆடுகள் உயிரிழந்தன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கொய்யப்பழ வெடி வெடித்து 2 ஆடுகள் உயிரிழந்தன.

கரிவலம்வந்தநல்லூா் ஒப்பனையாள்புரம் காலனியை சோ்ந்த வேலு மகன் முருகன்( 54).

ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவா், திங்கள்கிழமை மாலை ஆடுகளை மேய்த்தபடி கரிவலம்வந்தநல்லூா் பெரியகுளம் கண்மாய் வழியாக வந்து கொண்டிருந்தாா்.அப்போது, அங்கு கிடந்த ஒரு கொய்யாப் பழத்தை 2 ஆடுகள் தின்பதற்கு முயன்றனவாம். அப்போது அது வெடித்துச் சிதறியதில் 2 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுதொடா்பாக முருகன் அளித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.

அதில், கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com