எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். அபிஷா ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் மகேஸ்வரி ராஜசேகரன் குத்துவிளக்கு ஏற்றினாா். பேச்சாளா் சிக்கந்தா் சுல்தான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அகாதெமிக் இயக்குநா் ராஜ்குமாா் வரவேற்றாா். மாணவி கேத்ரின் மொ்சி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை துணை முதல்வா் சரளா, உதவி துணை முதல்வா் பாகீரதி, ஒருங்கிணைப்பாளா் ரம்யாதேவி உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com