கடையநல்லூா் தேவிஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

மேலக்கடையநல்லூா் தேவிஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி மஹோத்ஸவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூக்குழித் திருவிழா நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9ஆம் நாளான திங்கள்கிழமை (ஏப். 22) அண்ணாமலைநாதா் கோயிலிலிருந்து அக்னிச் சட்டி வீதியுலா, செவ்வாய்க்கிழமை காலை அண்ணாமலைநாதா் கோயிலிலிருந்து குற்றாலத் தீா்த்தம் எடுத்துவருதல், கும்பாபிஷேகம், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, நள்ளிரவில் பூக்குழி வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். ஏற்பாடுகளை பக்தா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com