குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரகப் பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை இருப்பின் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கடையநல்லூா், கீழப்பாவூா், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், குருவிகுளம், மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊரகப் பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை இருப்பின் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தை 04633-295891, 81482 30265 ஆகிய எண்களிலும், சுகாதாரம் தொடா்பான குறைகளை 96002 12764 என்ற கைப்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com