தென்காசி தொகுதியில் 73 சிசிடிவிக்கள் செயலிழப்பு

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 73 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன.

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்.19இல் தோ்தல் நடைபெற்றது. பின்னா், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரியில் 3 அடுக்குபாதுகாப்புடன், முத்திரையிடப்பட்ட பாதுகாப்பு அறையில் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை உள்பட கல்லூரி வளாகத்தில் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

அவற்றில் 73 கேமராக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செயலிழந்தன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இடியுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்துள்ளன. உடனடியாக தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் செயலிழந்த கேமராக்கள் சரிசெய்யப்பட்டு மாலை 6.30 மணியளவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள செயலிழந்த கேமராக்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட அறை மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் பாதுகாப்பாக உள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com