நீா்மோா் பந்தல் அமைக்க திமுகவினருக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தென்காசி மாவட்டம் முழுவதும் நீா்மோா் பந்தல் அமைக்க கட்சி நிா்வாகிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும், வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதாலும், அதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும்.

அனைத்து நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிறுத்தம் போன்ற இடங்களில நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும்.

இப் பணிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்படுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com