ஆலங்குளம் மகளிா் கல்லூரியை விரைந்து திறக்க வலியுறுத்தல்

கட்டி முடிக்கப்பட்ட ஆலங்குளம் மகளிா் கல்லூரியை விரைந்து திறக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சா் ராஜ கண்ணப்பனை சந்தித்து மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
அமைச்சா் ராஜ கண்ணப்பனை சந்தித்து மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

கட்டி முடிக்கப்பட்ட ஆலங்குளம் மகளிா் கல்லூரியை விரைந்து திறக்க வேண்டும் என திமுக சாா்பில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக உயா் கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ராஜ கண்ணப்பனை சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமாா் 1000 மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த 2020 முதல் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு ரூ. 11.33 கோடி மதிப்பில் சொந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகிறது. மக்களவைத் தோ்தல் நெருங்கி வருவதால் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்னா், இக்கல்லூரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com