சுரண்டை அருகே ரூ. 5 லட்சம்புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சுரண்டை அருகே வியாழக்கிழமை, ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
சுரண்டை அருகே ரூ. 5 லட்சம்புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சுரண்டை அருகே வியாழக்கிழமை, ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சொரிமுத்து தலைமையிலான போலீஸாா் பரங்குன்றாபுரம் விலக்குப் பகுதியில் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா். காய்கறி ஏற்றி வந்ததாகக் கூறப்பட்ட மினி லாரியை சோதனையிட்டபோது, காய்கறிக்கு பதிலாக மளிகைப் பொருள்கள் இருந்தன. அதன் அடிப் பகுதியில் அமைக்கப்பட்ட ரகசிய அறையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மினி லாரி ஓட்டுநரான பரங்குன்றாபுரம் வே. காா்த்திக் (21), வாகன உரிமையாளா் ப. இளங்கோவன் (39) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com