
கேரளாவிற்கு அனுமதியளிக்கப்பட்ட அளவை விட கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை கண்டித்து விரைவில் வாகனங்கள் சிறைபிடிக்கும் போராட்டம்நடத்தப்படும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வியாழக்கிழமை தெரிவித்தாா்.பட்டியிலப் பெண்ணை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டு வேலை வாங்கியதுடன் கடுமையாக தாக்கிய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சட்டப்படி நடவடிக்கைத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தென்காசி தெற்கு மாவட்ட செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, அமைப்பு செயலா் பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவா்கள் சண்முகசுந்தரம், மூா்த்தி, மாவட்ட பொருளாளா் சாமிநாதன் முன்னிலை வகித்தனா்.வடக்கு மாவட்ட செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பேசியதாவது,விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.இத்தோ்தலில் தமிழகத்திலேயே அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற அனைவரும் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.கடந்த காலங்களில் கேரளாவிற்கு பகல் நேரங்களில் தான் அதிகமாக கனிமவளங்களை ஏற்றி லாரிகள் சென்றவண்ணம் இருந்தது. தற்போது 24 மணிநேரமும் அதிகளவில் கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஏற்கனவே கனிமவளக் கொள்ளையை கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதேநிலை நீடித்தால் கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.ஒன்றிய செயலா்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன், வசந்தம் முத்துப்பாண்டி, ராமச்சந்திரன், துரைப்பாண்டியன், வேல்முருகன், இருளப்பன், அமல்ராஜ், என்.ஹெச்.எம்.பாண்டியன், நகர செயலா்கள் ஆறுமுகம், கணேசன், எம்.கே.முருகன்,பேரூா் செயலா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், டாக்டா் சுசீகரன், கணேஷ்தாமோதரன் ஆகியோா் கலந்துகொண்டனா். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த் தொகுத்து வழங்கினாா்.மாவட்ட துணை செயலா் பொய்கை மாரியப்பன் நன்றி கூறினாா்.