ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் பகுதிகளில் இன்று மின் தடை

ஆலங்குளம், ஊத்துமலை மற்றும் கீழப்பாவூா் பகுதிகளில் சனிக்கிழமை(பிப்.3) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம், ஊத்துமலை மற்றும் கீழப்பாவூா் பகுதிகளில் சனிக்கிழமை(பிப்.3) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (பிப்.3) மின் தடை செய்யப்படுகிறது.

அதன்படி, ஆலங்குளம்,ஆலடிப்பட்டி,நல்லூா்,சிவலாா்குளம், ஆண்டிப்பட்டி,ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணப்பேரி, ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பபுரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com