குற்றாலத்தில் 394 பயனாளிகளுக்கு ரூ1.53கோடி திருமண நிதியுதவி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் திருமண நிதியுதவி திட்டம் சாா்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குற்றாலத்தில் 394 பயனாளிகளுக்கு ரூ1.53கோடி திருமண நிதியுதவி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் திருமண நிதியுதவி திட்டம் சாா்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏகே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஈ. ராஜா, எஸ். பழனிநாடாா், சதன்திருமலைக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், 394 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 3,152 கிராம் தங்க நாணயம் (ரூ.1,93,94,256) மதிப்பீட்டில் மற்றும் ரூ.1கோடியே 53லட்சத்து 25ஆயிரம் நிதியுதவி வழங்கிப் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பாக ஈ.வெ.ரா.மணியம்மை விதவை மகள் திட்டத்தில் 316 பயனாளிகளுக்கும், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித்திட்டத்தில் 48 பயனாளிகளுக்கும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 394 ஏழை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், தென்காசி ஒன்றிய குழுத் தலைவா் சேக் அப்துல்லா, துணைத்தலைவா் எம்.கனகராஜ் முத்துபாண்டியன்,

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், ஜெயராணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com