நாம் தமிழா் கட்சி நிா்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரி இந்திரா காலனியை சோ்ந்தவா் மதிவாணன். இவா் நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறாா். கடந்த 2011 சட்டப்பேரவை தோ்தலில் வாசுதேவநல்லூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

இவரது வீடு மற்றும் புகைப்பட ஸ்டுடியோவில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளா் சுபின்ராஜ் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கைப்பேசிகள், சிம்காா்டு உள்ளிட்ட ஆவணங்களை அவா்கள் எடுத்துச் சென்ாகவும், சென்னையில் உள்ள அலுவலகத்தில் வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு மதிவாணன் ஆஜராகுமாறும் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com